கத்தார் கொண்டாட்டத்துக்கு செல்கிறார் கனிமொழி: கடுப்பில் எகிறும் செயல்தலைவர் ஸ்டாலின்...

First Published Mar 5, 2018, 1:07 PM IST
Highlights
Kanimozhi goes to Qatar celebration


கனிமொழியின் ‘கொண்டாட்ட’ முடிவு ஒன்று ஸ்டாலினை கலவரப்படுத்தி கடுப்பாக்கி இருக்கிறது என்கிறார்கள் அறிவாலயத்துக்கு மிக நெருக்கமான தி.மு.க. புள்ளிகள். 

இதுதான் பிரச்னை...2ஜி வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலையானபோது பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தி.மு.க. சென்னையில் ஸ்டாலின், தன் கையால் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். தீர்ப்புக்கு பின் டெல்லியிலிருந்து வந்த கனிமொழியை ஸ்டாலின் வரவேற்க, கனியும் அண்ணனை அணைத்து தனது நெகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் இந்த தீர்ப்பின் விளைவால் ’ஊழல் கட்சி’ என்று விமர்சிக்கப்பட்டு வந்த தி.மு.க. மீதான பார்வை அடியோடு மாறியது. மக்கள் மனதில் தி.மு.க. மீதான அபிப்ராயம் மளமளவென நேர்முகமாக எகிறியது. இது பி.ஜே.பி.க்கும் மிகப்பெரிய மன சோர்வை உண்டாக்கியது. இதனால் 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுக்கு அதிக ஆதாரங்கள், அழுத்தங்களுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. எப்படியாவது வென்றே தீருவது எனும் வெறியில் இருக்கிறது. 

இதை ஸ்மெல் செய்துவிட்ட ஸ்டாலின் ‘2ஜி விடுதலையை கொண்டாடியது போதும். இனி அடக்கி வாசியுங்கள் கொஞ்ச காலத்துக்கு. தேவையில்லாமல் எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம்.’ என்று சொல்லியிருந்தார். ஆனால் அதையும் மீறி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், கனிமொழி குடும்பத்தின் தீவிர ஆதரவாளருமான செல்வராஜ் 2ஜி வழக்கு வெற்றி கூட்டத்தை கனிமொழியை வைத்து நடத்தினார். ஸ்டாலினிடம் வாங்கியும் கட்டினார். இதன் பிறகு கழகத்தில் யாருமே 2ஜி வெற்றி விழா பற்றி பேசுவதில்லை. 

இந்நிலையில் கத்தார் நாட்டில் செயல்படும் தி.மு.க. கட்சியின் சார்பாக ‘2ஜி வழக்கின் வெற்றி விழா’ கொண்டாட அந்நாட்டு தி.மு.க. நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதில் கலந்து கொள்ளும்படி கனிமொழிக்கு அழைப்பு விடுக்க, அவரும் சம்மதித்துவிட்டார். விழா வரும் 27-ல் கத்தாரில் நடக்கிறது. 
இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்குப் போக, ‘நான் தான் அமைதியாக இருக்க சொல்லியிருக்கேனே! அதையும் தாண்டி ஏன்? கார்த்தி சிதம்பரம் நிலைமை என்னாச்சுன்னு பார்க்கிறாங்கதானே?!’ என்று கடுப்பாகி பேசினாராம். 

இதுதான் சமயமென்று, ஸ்டாலினுக்கு அருகிலிருக்கும் சில முக்கியஸ்தர்கள் ”சொன்னா தப்பா நினைக்காதிங்க தளபதி. தீர்ப்பு வந்த அன்னைக்கு டெல்லியில வெச்சு ’தமிழகம் சென்று கட்சியை வலுப்படுத்த போகிறேன்.’ அப்படின்னு கனிம்மா பேட்டி கொடுத்தது உங்களோட அதிகாரத்துக்கு நல்லதா தெரியலை.’ என்று எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு அவருக்கு பி.பி.யை எகிற வைத்திருக்கின்றனர். 
இந்த விவகாரம் எப்படி வெடிக்கப்போகிறதென தெரியவில்லை! என்கிறார்கள். 

click me!