திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகிறார் கனிமொழி.? தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

By Ajmal Khan  |  First Published Oct 7, 2022, 9:41 AM IST

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 


திமுக உட்கட்சி தேர்தல்

திமுக உட்கட்சித் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதியவா்கள். இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. இதனையடுத்து இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் இன்று வேட்புமனு  தாக்கல் செய்யவுள்ளனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்கள் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை கழகம் தெரிவித்திருந்தது.

Tap to resize

Latest Videos

நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்..? சீமான் எழுதிய கடிதத்தால் பரபரப்பு


துணைப் பொதுச்செயலாளராகிறார் கனிமொழி

எனவே திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு  டி.ஆர் பாலும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை இதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.  திமுகவின் தற்போதைய சட்ட விதிகளின்படி ஐந்து பேர் துணைப் பொதுச் செயலாளர்களாக இருந்த நிலையில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுகவில் மகளிருக்கான துணைப் பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில், கனிமொழி எம்.பி நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்

இந்து ராஷ்டிரத்தை உருவாக்கி கல்வி, வேலை வாய்ப்பை ஒழிக்க திட்டம்..! ஒரே தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ் தான்- மமக
 

click me!