டெல்லியில் கனிமொழி, திருமாவளாவனை தடுத்த ராணுவம்... கொந்தளிக்கும் திருமா..!

By Asianet TamilFirst Published Feb 4, 2021, 9:33 PM IST
Highlights

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற தமிழக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளாவன் உள்ளிட்டவர்களை ராணுவம் தடுத்து நிறுத்தியது.
 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடுங்குளிரிலும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் போராடிவரும் நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் பிடிவாதமாக உள்ளது. இ ந் நிலையில் டெல்லியில் விவசாயிகள் நுழையாமல் இருக்க சாலையில் அரண் அமைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் போராடும் இடத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விவசாயிகளைச் சந்திக்க இன்று நேரடியாக சென்றனர்.


ஆனால், விவசாயிகளைச் சந்திக்க விடாமல் துணை ராணுவத்தினர் தடுத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக விசிக  தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுடெல்லி காசிப்பூர் எல்லையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை, மக்களை சந்திக்க சென்றோம். அங்கே நுழையக் கூடாது என்று துணை ராணுவத்தினர் தடுத்தார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்து சில நூறுஅடி தூரம் சென்றோம். அங்கும் பல தடுப்பரண்களை வைத்திருந்தார்கள். அந்நியநாட்டு எல்லை ஒரத்தில் குவிக்கப்படுவது போல அங்கே துணை ராணுவத்தினர் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளை நாம் சந்திக்க முடியவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை இயற்ற வேண்டும், ஒடுக்குமுறைகளை கைவிட வேண்டும் என அங்கே குரலெழுப்பினோம் எமது எதிர்ப்பை தெரிவித்தோம். பின்னர் புதுடெல்லிக்கு திரும்பினோம். மோடி அரசு மிகமோசமான முறையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. பகைவர்களை அணுகுவது போல விவசாயக் குடிமக்களை அணுகுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த பிரச்சனைக் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

click me!