அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டம் கோட்டையில்... கமல்ஹாசன் தாறுமாறு..!

Published : Nov 09, 2020, 10:24 PM IST
அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டம் கோட்டையில்... கமல்ஹாசன் தாறுமாறு..!

சுருக்கம்

அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கடந்த 7-ம் தேதி தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சினிமா ரசிகர்கள், மநீம தொண்டர்கள் ஆகியோர் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு கமல் ஹாசன் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.
அதில், “ என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” என்று கமல்ஹாசன் தெரிவித்திருருந்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?
ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!