
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்
சென்னையில் நடந்த மாதிரி கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய கமல்,தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னையில் நடைப்பெற்ற மாதிரி சபை கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன்
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபா் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. எனவே மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டங்களை மறவாமல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப் பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 1 முதல் ரூ.5 கோடி
கிராமசபை கூட்டங்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என கமல் தெரிவித்ததோடு, இதுவரை மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை முன்வைத்து பேசி உள்ளார்
அதில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ரூ.1 முதல் ரூ.5 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதே வேளையில் கிராம சபை கூட்டங்கள் மூலம் ஊழல் தடுக்கப்படும், கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்படும்.
கடந்த 25 ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தி வந்திருந்தால், இன்று இந்த அளவு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு கிடையாது.
இனியாவது விழித்துக்கொண்டு, கிராம சபா கூட்டங்களை கூட்டி கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரித்து ஊழலை குறைத்து பின்னர் தடுத்து, அதன்பின் முழுவதும் ஊழலை ஒழிக்க வேண்டும் என பேசினார் கமல்
மேலும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளார்.