”என் காலம் முடியறதுக்குள்ள இது நடக்கும்” - வாக்குறுதி கொடுக்கும் கமல்...!

 
Published : Jan 22, 2018, 10:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
”என் காலம் முடியறதுக்குள்ள இது நடக்கும்” - வாக்குறுதி கொடுக்கும் கமல்...!

சுருக்கம்

kamalahassan says India will start from Tamil Nadu

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் எனவும் எனவும்  நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் அதற்கான பயணம் அடுத்தமாதம் தொடங்குகிறது எனவும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை எனவும் குறிப்பிட்டார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவ்வபோது ஆளுங்கட்சியான எடப்பாடி ஆட்சியை விமர்சித்து வந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஆனால் நடிகர் கமல் அதற்கு பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்து வந்தார். இவை அனைத்தையும் தமது டுவிட்டர் மூலமே பரப்பி வந்தார். அதற்கும் மீடியாக்கள் செவி சாய்த்தன. 

இதையடுத்து அவர் களத்தில் இறங்கட்டும் அப்புறம் பேசட்டும் என அமைச்சர்கள் ஏவி விட்டனர். அதே போல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் தெரிவித்தார். 

இந்நிலையில் இடையிடையே காணமல் போவதால் பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் ஜனவரி 26-ந் தேதி முதல் தீவிர அரசியலில் குதிக்க போவதாக தெரிவித்துள்ளார். 

இதைதொடர்ந்து இன்று வேளச்சேரியில் நடிகர் கமல் பேசுகையில் என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் எனவும் இந்தியாவின்பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் எனவும்  தெரிவித்தார். 

மேலும் அதற்கான பயணம் அடுத்தமாதம் தொடங்குகிறது எனவும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை எனவும் குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!