
ஜெயலலிதாவுடன் தினகரன் 20 வருடங்கள் இருந்ததால் அவரது அமானுஷ்ய சக்திகளை தினகரன் பெற்று விட்டதால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றார் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் கேரளா நம்பூதிரி வேங்கட சர்மா.
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கேரள நம்பூதிரி வேங்கட சர்மா பல்வேறு பகீர் தகவல்களை கூறியிருக்கிறார்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு சித்தர். அவருக்கு நிறைய மந்திரங்களை கற்று வைத்து கொண்டு அதை பயன்படுத்த முடியாமல் இருந்துள்ளார். தற்போது சொத்துகுவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவின் வாயை கட்டியதே ஜெயலலிதாவின் ஆவி தான்.
ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது டிசம்பர் 4 ஆம் தேதியும் இல்லை, 5 ஆம் தேதியும் இல்லை. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அவர் உயிர் பிரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். தொண்டர்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை தெய்வ நிலையை அடைய வைத்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. தான் துன்புறுத்தப்பட்டுதான் உயிரிழந்ததாக அவரே என்னிடம் சொன்னார்.
ஜெயலலிதாவின் கோபம் சசிகலா மீது தான் அதிகமாக இருக்கிறது. தினகரனை பற்றி அவர் எதையும் சொல்லியது இல்லை ஜெயலலிதாவுடன் 20 வருடங்கள் இருந்ததால் அவரது அமானுஷ்ய சக்திகளை தினகரன் பெற்று விட்டதால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் ஆவை ஆர்.கே. நகர் பக்கம் வராதபடி தடுக்கும் சக்தி தினகரனுக்கு உண்டு என்றார்.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. சிறையில் சசிகலா ஜெயலலிதாவை நினைத்து அவரது நினைவு நாள் முதல் மௌன விரதம் இருக்கிறார் என்று தினகரன் தெரிவித்திருந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆவி தான் சசிகலாவின் வாயை கட்டியயுள்ளது என்று வேங்கட சர்மா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.