
தமிழகமெங்கும் தற்போது புலம்பிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் பேருந்து கட்டண உயர்வு பற்றிதான். அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். பேருந்து கட்டண உயர்வு எதிரொலியாக சில இடங்களில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதுஒருபுறம் கட்டண உயர்வுக்கு சாக்கு சொல்லும் அமைச்சர்களை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கவர்மெண்ட் பஸ் டிக்கெட்டை நிதிச்சுமை காரணமாக கூட்டிருக்காங்களாம். மக்கள் தான் பஸ் ஓனர்ங்குறதுனால சுமையை ஏத்துக்கச் சொல்லி எடப்பாடி சொல்லிட்டாரு. ஒருத்தரு மத்த மாநிலதோடம் கம்பர் பண்றப்போ கம்மிதான்னு சொல்றாரு என்னத்த பண்றது?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. பேருந்துகள் மக்களுக்கானது, இது மக்களுக்கான நிறுவனம். எனவே இதை மக்கள்தான் சரி செய்ய வேண்டும். பேருந்து கட்டணம் சரி செய்ய முடியாதது. மிகவும் மன வேதனையுடன்தான் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தினோம். மக்கள் இதை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுங்க
மக்கள்; அப்பறம் என்னத்துக்கு நீங்க முதல்வரு?
அமைச்சர் தங்கமணி- நஷ்டத்தை தவிர்க்க பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; இதனை மக்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்
மக்கள்: மக்களோட குறைய தீத்து வைக்கதான் அரசு இப்படி உங்க நஷ்டம் கணக்க மக்களோட கஷ்டத்துல திணிக்க இல்ல....
- அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுக கொடியில் அண்ணா
படம் இல்லை என்றால்
அண்ணா இருந்தார் என்ற
அடையாளமே இருந்திருக்காது
மக்கள்: "அண்ணா"ன்னு ஒருத்தர் இல்லைனா அதிமுகவே இருந்துருக்காது விஞ்ஞானி..!
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ; ஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்.
மக்கள்: மற்ற மாநில MLAக்களுக்கு சம்பளம் குறைவுதான்... நீங்களும் சம்பளம் கம்மியாகவே வாங்கிக்கலாமே...
கடும் நிதிநெருக்கடியால் பேருந்து கட்டணஉயர்வு- அமைச்சர் விளக்கம் ஏன் உங்க சம்பளத்த ஏத்தும் போது நிதி சுமை இல்லையா..
அமைச்சர் : பேருந்து கட்டணஉயர்வை திரும்பப் பெற வாய்ப்பில்லை. கடும் நிதிநெருக்கடியால் பேருந்து கட்டணஉயர்வு
மக்கள்: கடும் நிதிநெருக்கடியில் எதுக்குடா MLAக்கு 1லட்சமாக சம்பளம் கடும் நிதிநெருக்கடியில் எதுக்குடா MGR நூற்றாண்டு விழா கடும் நிதிநெருக்கடியில் எதுக்குடா MLAக்கு புதியகார்?
அமைச்சர் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வாய்ப்பில்லை: கடும் நிதிநெருக்கடியால் பேருந்து கட்டணஉயர்வு
போக்குவரத்து ஊழியர்களே இப்ப ஏன் போராட்டம் பண்ணல..? உங்களுடைய ஊதிய உயர்வு மக்களின் தலைமேல் இடியாய் விழுந்தது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் : அரசுப் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளபோதிலும், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது -
மக்கள்: ஆமா, ரொம்ப பரம ஏழைகள்தான் ஆம்னி பஸ்ல போறாங்க. அதனால அதையெல்லாம் ஏத்திடாதீங்க.
செல்லூர் ராஜு: அண்டை மாநிலங்களைவிட குறைவாகத்தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
மக்கள்: அப்புறம் ஏன் எம்.எல்.ஏக்கள் சம்பளம் மட்டும் அண்டை மாநிலத்தைவிட அதிகமா இருக்கு. எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திட்டு... இப்ப நிதி பற்றாக்குறைன்னு ஏழை மக்களும் நடுத்தர வர்க்கமும் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை ஏத்தறீங்கய்யா... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்.