
எரிப்பொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களை கூறி பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் அப்பாவி மக்கள் அல்லப்படுகின்றனர். இப்படி அரசின் நிதி நிலையை மக்கள் தலையில் சுமத்திய நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் தமக்கு வேண்டாம் என்று தினகரன் தெரிவித்தார்.
எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்வு
சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவர். முன்னாள் எம்எல்ஏக்கள் 20ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர் என இப்பட்ட ஒரு அறிவிப்பு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தமிழ சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது. எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்வு; மக்களுக்கு 70% கட்டண உயர்வு. அரசின் ஈவு இரக்கமற்ற செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான்.
திரும்ப பெற முடியாது
இப்படி, ஒரேடியாக 66 சதவீதம் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார்.
மக்களை வஞ்சித்துள்ளது
இந்நிலையில் இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதி நிலை நெருக்கடியை காரணம் காட்டி அதிமுக அரசு மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்திவிட்டு எம்.எல்.ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அப்படிப்பட்ட சம்பளமே எனக்கு வேண்டாம், அந்த சம்பளத்தை நாள் வாங்கப்போவதில்லை. உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும். நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்களை வஞ்சித்துள்ளது இந்த அரசு என கூறினார்.