
ரஜினியும் தானும் நல்ல நண்பர்கள் எனவும் ஆனால் அரசியலில் அவரையும் தன்னையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கத்தக்கது எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப தினம் முதலே தான் அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என கூறி மக்களையும் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
மாநிலத்தில் அதிமுக, திமுக, மத்தியில் பாஜக, காங்கிரஸ் என அனைத்து தரப்பும் ரஜினியை வளைத்து போட திட்டம் தீட்டியது. ஆனால் ரஜினி எதற்கும் பிடி கொடுத்தார் போலில்லை.
இதனிடையே ரஜினியின் உற்ற நண்பரான கமலஹாசன் அவ்வபோது அரசியல் பேச ஆரம்பித்தார். அதில் தமிழகம் எங்கும் ஊழல் நிரம்பியிருப்பதாக கூறி தமிழக அரசை வம்பிக்கு இழுத்தார்.
இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை எதிர்க்க தொடங்கினர். அந்த நாள் முதல் கமல் ஒவ்வொரு நாளும் அரசியல் பேசி வந்தார்.
இதனால் ரஜினிக்கு முன்பே கமல் அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்து விட்டார். இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனையும், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து அரசியல் பேசினார்.
அதை வெளிப்படையாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமலிடம் ரஜினி குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய கமல், ரஜினியும் தானும் நல்ல நண்பர்கள் எனவும் ரஜினி ஒரு பாதையில் செல்பவர் தான் வேறு பாதையில் செல்பவன் எனவும் தெரிவித்தார்.
ரஜினியையும் தன்னையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கதக்கது எனவும், தான் அரசியல் களம் இறங்கப்போவதாக அவரிடம் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தன்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும் திறம் வாய்ந்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் தான் ஆரம்பிக்கும் கட்சிக்கு ஆம் ஆத்மி போன்று மக்களிடம் இருந்து நிதி திரட்டப்படும் எனவும் நடிகர் கமல் தெரிவித்தார்.