லோகோவை காப்பியடித்த கமல்...! கலாய்த்த ஹெச்.ராஜா!

First Published Feb 22, 2018, 5:35 PM IST
Highlights
Kamal who shook the logo! H. Raja


தங்கள் திட்டத்தில் உள்ள லோகோவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நடிகர் கமல் ஹாசன் கட்சி சின்னம் வெளியிட்டுள்ளதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பிரவேசத்தை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை துவக்கிய கமல், கட்சியின் பெயரையும் கொடியையும் நேற்று அறிமுகம் செய்தார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இதனை அவர் அறிவித்தார்.

தனது கட்சியின் பெயராக, மக்கள் நீதி மையம் என்றும்,  ஒன்றிணைந்த 6 கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கொடியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன.

இணைந்த கரங்கள் போன்ற சின்னம் ஏற்கனவே உள்ளது. தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) மற்றும் தமிழர் பாசறை போன்ற அமைப்புகள் அந்த லோகோவை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இடது கைகள் இணைந்துள்ள நிலையில் அந்த லோகோ இருந்தது. ஆனால் கமல் ஹாசனின் கட்சி கொடியில், வலது கரங்கள் இணைந்த நிலையில் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இருந்த சின்னத்தில் இருந்துதான் கமல், காப்பி அடித்துள்ளார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் வலைத்தளங்களிலும் இதேபோன்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், கமலின் ஆதரவாளர்கள், அது வேறு இது வேறு என்று சின்னம் குறித்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கமல் வெளியிட்ட சின்னம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தங்கள் திட்டத்தில் உள்ள லோகோவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சின்னம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டரில், ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை திருப்பிப் போட்டால் மநீம (மக்கள் நீதி மய்யம்) என்று குறிப்பிட்டுள்ளார்

click me!