
முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதாகவும், அதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என்றும் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், இணை தயாரிப்பானருமான அசோக்குமார், கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்ல பொது மக்களையும் அதிரச் செய்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் மீது இபிகோ 306 வது பிரிவின்படி வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தது தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால் , கந்துவட்டி கொடுமையை அறவே ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அசோக்குமாரின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கும்போது ரஜினியும் கமலும் இன்னும் எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இப்பிரச்சனையில் டுவிட்டர் அரசியல்வாதி எங்கே போனார்? என தமிழக .பாஜக தலைவர் தமிழிசை கமலஹாசனை கலாய்த்திருந்தார்.
இந்நிலையில் கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதாகவும், அதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் மரணம் போன்று இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது எனவும் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.