விளம்பரம் செய்யும் செலவுத் தொகையில் கழிப்பறை கட்டலாம் ….  பாஜகவை கலாய்க்கும்  சிவசேனா!!

First Published Nov 23, 2017, 9:58 AM IST
Highlights
samna news paper opp to bjp


மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்திற்காக செய்யும் விளம்பர செலவுத் தொகையில் ஏராளமான கழிப்பறைகள் கட்டலாம் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் மாகாராஷ்ட்ரா  மாநில பாஜக  அரசில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, பிரதமர் மோடி மற்றும்  பாஜக வை தொடர்ந்து  விமர்சனம் செய்து வருகிறது.

பணமதிப்பிழப்பு  நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அதில் அரசியல் ஆதாயத்தையும், சுய விளம்பரத்தையும் பெறுவதில் பாஜக  நிபுணத்துவம் பெற்ற கட்சியாக உள்ளது என்றும் சிவசேனா கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழானசாம்னா'வில் , கங்கை நதியை தூய்மை திட்டத்திற்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழித்தது. ஆனால் அத்திட்டத்தால் ஒரு பயனும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.. இதே போல் பிரதமர் மோடியின் விருப்பமான தூய்மை இந்தியா திட்டத்துக்கும் ஏற்படும் என்று குற்றம்சாட்டியுள்ளது..

தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் தன் கையில் துடைப்பத்தை எடுத்தார். அடுத்து வால் பிடித்தாற்போல எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் என வரிசையாக துடைப்பத்தை கையில் எடுத்தனர். இது ஒரு நாடகம் என்றும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் சாம்னா குற்றம்சாட்டியுள்ள

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிப்பறைகள் கிடையாது என்றும் அதனால்தான் பொது மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவிடப்படும் பணத்தை கொண்டு நாட்டில் கழிப்பறைகளை மத்திய அரசும், மாநில அரசும் கட்ட வேண்டும் என்றும் அந்த பத்திரிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிவசேனா கட்சி பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் .கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

click me!