
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், நேற்று மய்யம் கட்சியில் ஆப்-ஐ நேற்று அறிமுகம் செய்தார். பொதுமக்கள் தங்கள் கண்ணில் படும் குற்றங்கள், குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை கமல் ஹாசன் நேற்று வெளியிட்டார்.
அப்போது பேசிய கமல், சமூக பிரச்சனைகளை இந்த செயலியில் தெரிவிக்கலாம் என்றும், உங்கள் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மய்யம் விசில் செயலி இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார். மேலும் பேசிய கமல், திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் பஞ்சாயத்து கிராம சபையில் பங்கேற்க, தத்தெடுத்த பெற்றோராக அங்கு செல்வோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூருக்கு இன்று சென்றார். அங்கு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், கமல் அங்கு செல்வதற்கு முன்பாகவே அதிகாரிகள் கிராம சபைக் கூட்டத்தை முடித்து விட்டு சென்று விட்டனர். அதிகாரிகள் சென்ற பிறகு கிராம மக்களிடையே கமல் பேசினார்.
அப்போது, அதிகத்தூர் அரசு பள்ளியில் 3 வகுப்பறையில் கட்டித்தரப்படும். பள்ளியில் கழிப்பறை கட்டவும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதிகத்தூர் கிராம மக்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள பயிற்சி வகுப்பு எடுக்கப்படும் என்றார். அதிகத்தூரில் நீர் தேங்க வசதியாக குளம், குட்டைகள் அமைக்கப்படும் என்றார்.
நரிக்குறவர்கள் மற்றும் இருளர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய பாடுபடுவேன் என்றார். தொடர்ந்து பேசிய கமல், பேசிகொண்டே இருக்க வேண்டாம். வேலை நிறைய இருக்கு என்று கூறி கடமையை செய்வோம் என்று கமல் கூறினார்.