கலாம் வீட்டில் இருந்து களம் இறங்கும் கமல்… பிப்ரவரி 21 –ல் அரசியல் பயணம் தொடக்கம் என அறிவிப்பு  !!

 
Published : Jan 18, 2018, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
கலாம் வீட்டில் இருந்து களம் இறங்கும் கமல்… பிப்ரவரி 21 –ல் அரசியல் பயணம் தொடக்கம் என அறிவிப்பு  !!

சுருக்கம்

Kamal started his plotical travel from Kalam house in rameswaram

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை கொடங்க உள்ளதாக நடிகர் கமலசன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு நடிகர் கமலஹாசன் தீவிர அரசியல் குறித்து பேசி வந்தார். மேலும் தனது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி அரசியலில் குதிக்கதாக அறிவித்து அதற்கௌ செயலி ஒன்றையும் தொடங்கினார்.

இதனிடையே கடந்த மாதம் 31 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தும் அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன்  நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார்.  அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரவித்திருந்தார்.

ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து  ஆனந்த விகடன் வார இதழில் அவர்  எழுதியுள்ள கட்டுரையில், டாக்டர் அப்துல்  கலாமிற்கு பல கனவுகள் இருந்தன.  அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான்.  விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று.  நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!