கமல் பாஜகன்னா ஏன் இவ்வளவு குழம்புகிறார்... குழப்புகிறார்...?

 
Published : Sep 26, 2017, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
கமல் பாஜகன்னா ஏன் இவ்வளவு குழம்புகிறார்... குழப்புகிறார்...?

சுருக்கம்

kamal speech about bjp party

பாஜகவில் சேர்வதற்கு ரஜினிகாந்த் ஏற்றவர் என்று நேற்று சொன்ன நடிகர் கமலஹாசன் இன்று நிர்வாக ரீதியாக திட்டம் தீட்டப்பட்டால் பாஜகவுடன் கைகோர்த்து செயல்பட தயார் எனவும் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தீவிர அரசியல் பேசி வருகிறார். இதுகுறித்து விமர்சித்த தமிழக அமைச்சர்களுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்து வந்தார். 

ஊழல் தமிழகத்தில் நிரம்பியிருக்கிறது என கமல் கூறியதற்கு தமிழக அரசியல்வாதிகள் நிரூபிக்க வேண்டும் எனவும் வெறுமென வாய்களால் கூறி திரியகூடாது எனவும் தெரிவித்தனர். 

இதனால் கடுப்பான கமல் மக்களை துணைக்கு அழைத்து ஆதரவு திரட்டினார். இதையடுத்து இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றார் கமல். 

தான் கோவக்காரன் அரசியலுக்கு வரமாட்டேன் என கூறியவர் அமைச்சர்களின் விமர்சனத்தால் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டேன் என அறிவித்தார். 

மேலும் கேரளா சென்று முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் கற்க வந்தேன் என எடப்பாடியை கடுப்பேற்றினார். 

தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கமலஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் கமலஹாசன் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. 

ஆனால் தான் எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை எனவும் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். அதற்கான கட்சி, கொடி, சின்னம் தயாராகி கொண்டிருப்பதாக கமல் தெரிவித்தார். 

இந்நிலையில், நேற்று தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த கமலிடம் பாஜக குறித்து கேள்வி எழுப்பபட்டது. 

அப்போது, தான் பகுத்தறிவாளன், காவியின் மேல் நம்பிக்கை இல்லை, ரஜினி ஆன்மீகம் சிந்தனை நிரம்பியவர் எனவும் அவரே பாஜகவுடன் இணைய சரியான ஆள் எனவும் தெரிவித்தார். 

இன்று மற்றொரு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த கமல், நிர்வாக ரீதியாக திட்டமிடப்பட்டால் பாஜகவுடன் இணைய தயார் என தெரிவித்தார். 

கமலஹாசனின் இந்த முன்னுக்கு முரணான கருத்து பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..