
மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த பிறகு அவர் 3 நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்தார் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
மருத்துவமனை சென்ற அமைச்சர்கள், ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் செய்தியாளர்களிடம் அவர்கள் பேட்டி அளித்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும் இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்றும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பொன்னையன் உள்ளிட்ட சிலர், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர்.
இதனிடையே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நடைபெறும் விசாரணை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், வெங்கையா நாயுடு, ஆளுநர் உள்ளிட்டோர் பதில் சொல்ல வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார்.