
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில்,அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில சமயத்தில் லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு தமிழகத்தில் சற்று அதிகமான மழை பெய்து வருவதால் பொதுமகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.