
ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது என்றும், நாங்கள் (கமல் - கெஜ்ரிவால்) இருவரும் என்ன பேசியிருப்போம் என்பதை உங்களால் (செய்தியாளர்கள்) யூகித்திருக்க முடியும் என்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை விமான நிலையம் சென்ற கமலின் மகள் அக்சரா ஹாசன், அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்துச் சென்றார்.
பின்னர், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு வந்த கெஜ்ரிவால் - கமலின் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்ச்ர கெஜ்ரிவால், வகுப்புவாதத்துக்கும், ஊழலுக்கும் எதிராக போராடுவதுதான் குறிக்கோள் என்று கூறினார்.
நான் எப்போதுமே நடிகர் கமல் ஹாசனின் ரசிகன் என்றும் நடிகராக தனிப்பட்ட முறையில் அவரை கமலைச் சந்தித்ததாகவும் கூறினார்.
ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது என்றும் நாங்கள் இருவரும் என்ன பேசியிருப்போம் என்பதை உங்களால் யூகித்திருக்க முடியும் என்றார்.
கமல் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டின் சூழ்நிலை, தமிழக சூழ்நிலை குறித்து ஆலோசித்தோம். வருங்காலத்திலும் ஆலோசிப்போம் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.