
நடிகர் கமலஹாசனுக்கு வரும் நவ.7 ஆம் தேதி பிறந்த நாள். வழக்கம் போல் ரசிகர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடுவார் கமல். பல முறை இவர் பிறந்த நாளைக் கொண்டாடும் போதெல்லாம் ஏதாவது கருத்து சொல்வார். ஆனால், அது ஊடகங்களில் பெரும் பரபரப்பையோ கவனிப்பையோ பெற்றதில்லை. ஆனால், இந்த முறை அவர் பிறந்த நாள் குறித்த செய்தியே கூட ஊடகங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் செய்தியாக மாறிவிட்டது. காரணம் இதுவரை கமல் சொன்னது எல்லாம் ஏதோ உளறல்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவை அரசியலுக்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் இந்த பிறந்த நாள் செய்தியும் கூட பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவ.7ம் தேதி கமலஹாசனுக்கு 63வது பிறந்த நாள் வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், தனது பிறந்தநாளன்று கேக் வெட்டப் போவதில்லை, கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் என்று பேசினார்.
இன்று சென்னயில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் கமல் பல்வேறு கருத்துக்களைப் பேசினார். அதில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றும், கட்சி தொடங்க ரசிகர்களிடம் பணம் சேகரிப்பேன் என்றும் கமல் கூறியது பலரின் புருவங்களை உயர்த்தியது. இது அரசியலுக்கான முதல்படி என்றே பேசப்பட்டது.
இந்த முறை தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சென்னை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், நவம்பர் 7-ம் தேதி கேக் வெட்டப் போவதில்லை. கால்வாய்களை வெட்ட வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
நவம்பர் 7-ம் தேதி கேக் வெட்டப் போவதில்லை. கால்வாய்களை வெட்ட வேண்டிய நேரம் இது என்று கூறினார்.