
கர்நாடகாவில் மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மதுவிலக்கு அமல்படுத்தி அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
பீகாரில் மதுக்கடத்தல், மதுகுடித்தல், கள்ளச்சாராய விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுவிலக்கு திட்டம் வெற்றிபெற்றுள்ளது.
இதனால் நிதிஷ்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகாவிலும் மதுவிலக்கு கொண்டுவர அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து மாநில உயர் அதிகாரிகள், சமீபத்தில் பீகார் சென்று முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து மதுவிலக்கு குறித்து கேட்டறிந்தனர்.
இதுகுறித்து அறிக்கை தயாரித்து முதல்வர் சித்தராமையாவிடம் அதிகாரிகள் வழங்கவுள்ளனர். மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து சித்தராமையா ஆலோசித்து வருவதாக தெரிகிறது.