இந்துக்களுக்கு ரோஷம் வர ஆரமிச்சிருக்கு! அதை கோபமா மாத்திடாதீங்க... கமலுக்கு பேரரசு எழுப்பிய முதல் எதிர்க்குரல்!

First Published Nov 5, 2017, 8:06 PM IST
Highlights
director perarasu opposes kamals comment about hindu extremism


நடிகர் கமல்ஹாசனின் ‘இந்துக்களில் தீவிரவாதிகள்’ கருத்துக்கு முதல் எதிர்க்குரல் எழுந்துள்ளது, அவர் சார்ந்த திரைத்துரையில் இருந்து! இந்த எதிர்க் குரலை பதிவு செய்திருப்பவர் இயக்குனர் பேரரசு. 

அண்மையில் கமல்ஹாசன் தமிழகத்தில் வெளியாகும் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடர் கட்டுரையில் இந்துக்களில் தீவிரவாதிகள் உள்ளனர் என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளான நிலையில், அவருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக தனது இருப்பைக் காட்டிக் கொள்ள மதவாதத்தையும் இருவேறு சமுதாயத்தினரிடம் காழ்ப்பு உணர்வை ஊட்டும் வகையில் பிரிவினை வாதத்தையும் கையில் எடுத்திருக்கிறார் கமல் என்ற கருத்தை ஊடகங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், கமல்ஹாசன் சார்ந்த திரைத்துரையில் இருந்தே இப்போது முதல் எதிர்ப்புக் குரல் எழத் துவங்கியுள்ளது. இந்த முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்திருப்பவர் இயக்குனர் பேரரசு. 

அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ள கருத்து....

கமல் திறமையானவர், துணிச்சலானவர்,
அரசியலில் களம் இறங்கட்டும் வரவேற்போம். 
அவர் சமுதாய பிரச்சனையில் ஈடுபடட்டும்... சந்தோஷப்படுவோம்!
ஆனால் மதவிஷயங்களில் தலையிடாதீர்கள்...
முக்கியமாக இந்து விஷயத்தில் தலையிடாதீர்கள். 
எல்லா மதத்திற்கும் பொதுவானவராய் இருந்தால் மதவிமர்சனம் பண்ணுங்கள்!
இந்து எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு நெனச்சு இந்து தீவிரவாதம் போன்ற கருத்தை அள்ளி தெளிக்காதீர்கள்.
இந்துக்களுக்கு ரோஷம் வர ஆரம்பித்து இருக்கிறது!
அதை கோபமாக மாற்றி விடாதீர்கள்.
- பேரரசு!

என்று பதிவு செய்துள்ளார். அவரது துணிச்சலான பதிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள். சிலர் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்கள். 

இருப்பினும், பேரரசு இந்தக் கருத்தை, தன் நண்பர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 
 

click me!