
அதிமுக, பாஜக கூட்டணி விரைவில் உருவாகும் என அக்கக்ட்சியின் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
ஜெ., மறைவுக்குப் பின் அதிமுகவை பாஜகதான் இயக்குவதாக நாளுக்குநாள் முன்னணி தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை பாஜகவின் திட்டங்களுக்கு செக் வைத்து வந்தார். ஆனான் ஜெ., இருந்தவரை எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ அத்தனை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து ஒத்து மொத்தமாக சரணடைந்தது.
இவை அனைத்தும் மறைமுகமாகவே அரங்கேற்றிவந்தநிலையில் ஓ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் ஒன்று சேரும்போது அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இருவரின் கைகளையும் சேர்த்துவைத்து உறுதிப்படுத்தியதாக முக்கிய அரசியல் தலைகள் பெரும் விமர்சனத்தை வைத்தனர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் நினைத்த நேரத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள், எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்கொள்வான், மோடி பார்த்துக் கொள்வார் என பகிரங்கமாகவே பொதுமேடைகக்ளில் பேசினார்.
இந்நிலையில், அதிமுக சூலூர் தொகுதி எம்.எல்.ஏவான கனகராஜ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது, இரட்டை இலை- தாமரை கூட்டணி விரைவில் உதயமாகும்; இரட்டை இலையும் தாமரையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.