கமலுக்கு எதிராக போர்க்கொடி - உருவபொம்மையை எரித்த இந்து அமைப்பினர்...

Asianet News Tamil  
Published : Nov 05, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
கமலுக்கு எதிராக போர்க்கொடி - உருவபொம்மையை எரித்த இந்து அமைப்பினர்...

சுருக்கம்

Speaking of Hindu extremism the Vishwa Hindu Parishad has been protesting against Kamal Mughal embassy in Tirupur near Tirupur.

இந்து தீவிரவாதம் என்று பேசிய கமலுக்கு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அருகே  அனுப்பர்பாளையப்புதூரில் கமல் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னை, கேளம்பாக்கத்தில் பிறந்த நாள் மற்றும் நற்பணி மன்றத்தில், 38 வது ஆண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் உறுதியாக உள்ளதாகவும் இங்கிருக்கும் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை எனவும் பேசினார். 

அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகிவிட்டது எனவும் எத்தனை பேர் மிரட்டுகிறார்கள், எண்ணிக்கை முக்கியமில்லை என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியம் என குறிப்பிட்டார். 

நான் அடி வாங்கிக் கொள்கிறேன். அடிக்கடி தட்டுவதற்கு நான் மிருதங்கம் அல்ல என எச்சரிக்கை விடுத்தார். 

உ.பி.,யில் இருக்கும் இந்துவை விட இங்கிருக்கும் என் குடும்பத்தில் இருக்கும் இந்துக்களை கண்டு பயமாக இருக்கிறது எனவும் அதனால் மதத்தின் பெயரால் மருந்து என சொல்லிக் கொண்டு விஷம் தருவதை அருந்தாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், இந்து தீவிரவாதம் என்று பேசிய கமலுக்கு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அருகே  அனுப்பர்பாளையப்புதூரில் கமல் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி