இனி விதைப்பது நற்பயிராகட்டும் - கமல் பொங்கல் வாழ்த்து

 
Published : Jan 13, 2018, 10:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
இனி விதைப்பது நற்பயிராகட்டும் - கமல் பொங்கல் வாழ்த்து

சுருக்கம்

kamal pongal wish in twitter

இனி விதைப்பது நற்பயிராகட்டும் என தமிழ் மக்களுக்கு கமல்ஹாசன், பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக அரசுக்கு எதிரான கருத்துகளை கமல், டுவிட்டரில் பதிவிட்டு வந்தார். அதன்பிறகு அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்துள்ள கமல், அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கமல் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்து வருவதாக ஆளும் தரப்பினரும் கமலின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்களும் விமர்சித்தனர்.

ஆனால், மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் ஊடகமாக டுவிட்டரை கமல் பயன்படுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்துவதால், டுவிட்டரில் செயல்படுவதன் மூலம் இளைஞர்களிடம் கருத்துகளை கொண்டு சேர்க்க முடியும் என்பதாலும் கமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இனி விதைப்பது நற்பயிராகட்டும் என கமல் வாழ்த்தியுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/952012510680334336?ref_src=twsrc%5Etfw">January 13, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!