மம்தாவை சந்தித்தார் கமல்..! சூடு பிடிக்கும் ஆண்டவரின் அரசியல் போக்கு ...!

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
மம்தாவை சந்தித்தார்  கமல்..! சூடு பிடிக்கும் ஆண்டவரின் அரசியல் போக்கு ...!

சுருக்கம்

kamal met mamtha in kolkatta now

நடிகர் கமலஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இதனை  தொடர்ந்து  தற்போது  தீவிரமாக  அரசியலில் குதித்துள்ள கமல் வேறு மாநில  முதல்வர்களை  நேரில்  சந்தித்து  வருகிறார்.

மற்ற  மாநில  முதல்வருடான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாகவும், அதே  சமயத்தில் தன்னுடைய  அரசியல் வாழ்க்கைக்கு வழியாகவும்  அமையும்  என  அவர்  நம்பிக்கை  தெரிவித்து இருந்தார் 

 இந்நிலையில்  தற்போது  மேற்கு வங்க முதல்வர்  மம்தா  பானர்ஜியை  சந்திக்க கொல்கத்தா  சென்றடைந்தார் .

இதற்கு முன்னதாக  மரியாதை நிமித்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் ரீதியாகவும் ஆலோசனை நடத்தினார். 

சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து இன்று மாலை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் இன்று இரவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கமல்ஹாசன் சந்திக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!