அதிமுக அரசு அலறணும்.. ஆர்.கே.நகரில் அதிரடியாக களமிறங்கும் கமல்..!

 
Published : Dec 02, 2017, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
அதிமுக அரசு அலறணும்.. ஆர்.கே.நகரில் அதிரடியாக களமிறங்கும் கமல்..!

சுருக்கம்

kamal is planning to campaign in rk nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க சொல்லி மக்களிடம் கமல், வலியுறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்குவதை உறுதி செய்துவிட்டார். அரசியலின் முன்னோட்டமாக, செயலி ஒன்றையும் ஹாஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துவரும் கமல்ஹாசன், ஆர்.கே.நகரில் அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல், அரசியலுக்கு வர உள்ள நிலையில், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்ட பிறகு வரும் முதல் தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். அதனால், அந்த தேர்தலை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தினால்தான் மக்கள் மத்தியில் அபிப்பிராயத்தை பெறமுடியும் எனவே சில நாட்களாவது ஆர்.கே.நகர் பிரசாரத்தில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு ஆலோசனைகள் சொல்லும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அதை கருத்தில்கொண்டு, கமல் ஆர்.கே.நகரில் போட்டியிடாதபோதிலும், தொகுதிக்குள் சென்று அதிமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்து சொல்ல இருக்கிறாராம். மேலும் நல்ல வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது.

கட்சி தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னரே கமல், ஆர்.கே.நகர் பிரசார களத்தில் இறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!