டி.டி.வி.தினகரன் வெங்காயம் மாதிரி !! உரிக்க… உரிக்க ஒன்றுமில்லாமல் போவார் … செம்மய்யாக கலாய்த்த ஜெயகுமார் !!!

Asianet News Tamil  
Published : Dec 02, 2017, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
டி.டி.வி.தினகரன் வெங்காயம் மாதிரி !! உரிக்க… உரிக்க ஒன்றுமில்லாமல் போவார் … செம்மய்யாக கலாய்த்த ஜெயகுமார் !!!

சுருக்கம்

minister jayakumar speak about ttv dinakaran

வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் இருப்பதுபோல, டி.டி.வி.தினகரனும் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்  என்றும் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி. டி.டி.வி.தினகரனை ஒரு பொருட்டாக கருதவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேசும், அதிமுக சார்பில் மதுசூதனனும், சுயேட்சையாக டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர்.

நேற்று இவர்கள் மூவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தனர்.  இது குறித்து செய்தியாள்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயகுமார், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த  டி.டி.வி.தினகரன் தன்னுடைய ஆட்கள் 200 பேருடன் வந்து இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் புகார் அளித்துள்ளோம் என கூறினார்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ள தேர்தல் ஆணையம்,. நாங்கள் தான் அதிமுக என தெளிவாக சொல்லியிருக்கிறது. ஆனால்  தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் கொடியை உபயோகப்படுத்துவது சட்டவிரோதம் என்றும்,  அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

தினகரன் மீது  சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் அவர் எப்படி கொடிக்கு உரிமை கொண்டாட முடியும் என கேள்வி எழுப்பினார்..

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக போட்டியிட டி.டி.வி.தினகரனுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்..

வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் இருப்பதுபோல, டி.டி.வி.தினகரனும் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார் என்றும்  எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி. டி.டி.வி.தினகரனை ஒரு பொருட்டாக கருதவில்லை எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

உடைந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி..! பின்னணியில் பாஜக..! இறுதி முடிவெடுத்த ஸ்டாலின்..?
ஊராட்சி செயலாளர்கள்- 125 நாள் பணியாளார்களை பிரச்சாரத்தில் இறக்கிய திமுக... எடப்பாடி கடும் எச்சரிக்கை..!