
பிள்ளையை பெத்த பிறகு கல்யாணம் செய்து கொண்டு ‘லிவிங் டுகெதர்’ முறையை என்றோ தமிழனுக்கு அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன். அப்பேர்ப்பட்டவர் கட்சி துவங்கும் விஷயத்தில் சாதாரணமாக நடந்து கொள்வாரா? நான் வேற மாதிரி அரசியல்வாதி- என்று நிரூபிக்கப்போகிறார்.
கட்சியின் பெயர் அறிவிக்கவில்லை, கொடி அறிவிக்கவில்லை, சின்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் தமிழகம் முழுக்க 30 மாவட்டங்களுக்கு மேல் நிர்வாகிகள் கமல் கட்சிக்கு தயார் என்கிறார்கள். ஏற்கனவே அவரது நற்பணி மன்றத்தில் துடிப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் மாதிரியான பொறுப்பில் அமர வைக்கப்போகிறாராம்.
இது போக, சில மாவட்டங்களில் தனது மன்றத்துக்கு துளியும் தொடர்பில்லாத நபர்களை, தனது சுய விருப்பத்தின் பேரில் அவர்கள் செய்யும் சேவையை கண்டு மெர்சலாகி பதவிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறாராம் கமல்.
ஆக நிர்வாகிகள் ரெடி! திராவிட மண்ணில் அரசியல் செய்ய வேண்டியிருப்பதால் திராவிட கட்சிகளின் சாயலையுடய பெயரும், கறுப்பை அடிப்படையாக கொண்ட நிற கொடியும் உருவாகிறது என்கிறார்கள்.
எதிலும் தனித்துவம் காட்டும் கமல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனும் முனைப்புடன் துவங்கும் அரசியலில் என்ன தனித்துவத்தை காட்டப்போகிறார்!
காத்திருப்போம்...கவனிப்போம்!