தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதியிடமும் அப்படியொரு அப்ரோச்மெண்டை எதிர்பார்க்க முடியாது, ஆனால் கமல்ஹாசன் செய்து முடித்திருந்தார் கோவையில். தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விழாவை கடந்த ஞாயிறு அன்று கோயமுத்தூரில் நடத்தினார் கமல்.
தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதியிடமும் அப்படியொரு அப்ரோச்மெண்டை எதிர்பார்க்க முடியாது, ஆனால் கமல்ஹாசன் செய்து முடித்திருந்தார் கோவையில். தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விழாவை கடந்த ஞாயிறு அன்று கோயமுத்தூரில் நடத்தினார் கமல்.
மேடை வடிவமைப்பில் துவங்கி, நிகழ்ச்சியில் பார்வையாளர்களை அமரவைப்பது வரை அத்தனையில் செம்ம நேர்த்தி மற்றும் புதுமை. வழக்கமான அரசியல் தலைவனாக ‘அன்பார்ந்த...’ என்று மொக்கை செய்யாமல், தமிழகம் மற்றும் தேசிய பிரச்னைகளை Power-Point Presentation வடிவில் மெகா சைஸ் மானிட்டரில் வழங்கி, அதைத்தொட்டு இவர் அரசியல் உரையாற்றி, ‘டார்ச்லைட்டுக்கு வாக்களியுங்கள்’ என்று பேசியது அழகு. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அந்த விழாவுக்காக கோயமுத்தூர் சாலையில் கமல்ஹாசன் சென்றபோது நடந்த சம்பவம் ஒன்றுதான் இன்று மக்கள் நீதி மய்யத்தை அதிர வைத்துள்ளது! என்கிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமை நடந்த அந்த விவகாரம் இப்போதுதான் மெதுவாக வெளியே வர துவங்கியுள்ளது என்கிறார்கள், இதனை முழுமையாக அப்சர்வ் செய்திருக்கும் அரசியல் பார்வையாளர்கள். அப்படி என்ன நடந்துவிட்டது? அவர்களே விளக்கிட கேட்போம்.... “கோயமுத்தூரில் உள்ள கொடீசியா மைதானத்தில்தான் கமல் கட்சியின் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதற்காக நீண்ட சாலையில் காரில் நின்றபடி வந்திருக்கிறார் கமல். இரண்டு பக்கமும் ரசிகர்கள், மக்கள் சூழ்ந்து நின்றிருக்கின்றனர். அப்போது இரண்டு இளைஞர்கள் கூட்டத்தில் இருந்து கமலைப் பார்த்து ‘யேய் கமல்! கமல்! இங்க பாரு ’ என்று ஒருமையில் அழைத்திருக்கின்றனர். இதை அவர் கவனித்துவிட்டாலும், ஏதோ விஷமம் செய்கிறார்கள்! என்று சொல்லி கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் கூட்டத்தோடு காரின் பின்னே ஓடி வந்த அந்த நபர்கள், கையிலிருந்த சில பேப்பர்களை மடித்து கமல் மீது வீசியிருக்கிறார்கள். இதை, கமலின் காரை சுற்றி பாதுகாப்பாக ஓடிவந்த நிர்வாகிகள் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர். கமல் மேடைக்கு சென்றபிறகு அந்த பேப்பரை விரித்து வாசித்தபோது அதில்....’முதல்வர் எடப்பாடியாரை பொள்ளாச்சி விவகாரத்தில் ஓவராய் பேசுகிறாயே! பாலியல் பிரச்னைகளைப் பற்றி பேச உனக்கு என்ன கமல் தகுதி இருக்குது? உன்னை விடவா இளைஞர் சமுதாயத்தை ஒரு மனுஷன் சீரழித்துவிட முடியும்? நீ ஹீரோவாக நடிக்க துவங்கிய முதல் படத்திலிருந்து இதோ விஸ்வரூபம் 2 வரைக்கும் எடுத்துக் கொள்வோம். ஒரு பத்து அளவு கடந்த செக்ஸ், கிளாமர் இல்லாமல் இருக்குமா? தூங்காதே தம்பி தூங்காதே, விக்ரம் என்று நீ ஜட்டியும், தொடை தெரியும் குட்டி டிரவுசரும் போட்டுக் கொண்டு, திறந்த மார்பை காட்டிக் கொண்டு நாயகிகளைப் புரட்டி எடுக்காத படங்கள் உண்டா.
வெறும் பணத்துக்காக, இளைய சமூகம் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் நடித்த நீயெல்லாம் எடப்பாடியாரை பார்த்து பேசலாமா? அட சினிமாவை கூட விட்டுத்தள். உன் ரியல் வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம். வாணி முதல் கெளதமி வரை என்னாச்சு? என்னவெல்லாம் நடந்தது? கட்சி ஆரம்பித்த பிறகாவது கண்ணியம் காக்கிறாயா என்றால், அதுவுமில்லை. சமீபத்தில் பூஜாகுமாருடன் சிங்கப்பூர் சாலைகளில் நள்ளிரவில் நீ பதுங்கி, ஒதுங்கி நடந்ததை போட்டோ எடுத்து இணையத்தில் அரைத்துக் கொட்டினார்களே! பூஜாகுமாருடன் எங்கே போனீர்? ஏன் போனீர்? ’அது விஸ்வரூபம் -2 படத்தின் காட்சிகள்.’ என்று எஸ்கேப் ஆகிட நீர் நினைக்கலாம். அதை மறுப்போம், இது பற்றி விவாதிக்க பொது மேடைக்கு அழைப்போம் நாங்கள். தயாரா கமல்!?
உன் வாழ்க்கைதான் இப்படியென்றால், பாவம் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையாவது கண்டித்து வளர்த்திருக்கலாம்! இணைந்து வாழும் அப்பா- அம்மாவுடன் சேர்ந்து வாழ முடியாத சாபம் பெற்ற அந்தக் பெண்களுக்காவது தமிழ்நாட்டின் கண்ணிய கலாசாரம் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கலாம். அதையும் செய்யவில்லை நீ! இப்படி உன் தரப்பில் எந்த நியாயமும் இல்லாமல், முதல்வரைப் பார்த்து வெற்று அரசியலுக்காக குரல் கொடுக்கும் உன் கதைகளை வீடியோவாக வெளியிட்டால் உம் மய்யம் கட்சியின் மதிப்பு மக்களிடம் கவிழ்ந்து, அது சொய்ய்ய்ய்யம் ஆகிவிடும். ஜாக்கிரதை.’என்று எழுதப்பட்டிருந்ததாம்.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீஸில் புகார் கொடுக்கலாமா? என்று மநீம நிர்வாகி ஒருவர் வெள்ளந்தியாக கூற, அவர்கள் விசாரிக்கிறேன் பேர்வழியென்று அந்த கடிதத்தில் உள்ள விஷயங்களின் உண்மைத் தன்மையை கிளறினால், நம்மவரை விசாரணைக்கு அழைத்துப் பேசினால் மொத்த கதையும் அசிங்கப்பட்டுவிடும். காரணம், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் உண்மைதானே! அதனால கண்டுக்காம விட்டுடுங்க! என்று முக்கிய நிர்வாகிகள் அடக்கிவிட்டார்களாம். இந்த விவகாரம்தான் இப்போது அந்த கட்சிக்குள் பெரிய பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கிறது.” என்று முடித்தார்கள். மக்களும் கண்டுக்காம விட்டுடப்போறாங்க பாஸ் உங்களை!