நீங்கள் ஆளுங்கட்சி.. நாங்கள் எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டுவோம்.! திமுகவுக்கு வாழ்த்து சொன்ன ம.நீ.ம !

Published : May 07, 2022, 04:10 PM IST
நீங்கள் ஆளுங்கட்சி.. நாங்கள் எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டுவோம்.! திமுகவுக்கு வாழ்த்து சொன்ன ம.நீ.ம !

சுருக்கம்

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி ஸ்டாலின்  பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.  திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்,  அரசு பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.150 கோடி செலவில் தகைசால் பள்ளிகள் அமைக்கப்படும், தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும், 234 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' செயல்படுத்தப்படும் உள்ளிட்ட 5 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டை நிறைவு செய்யும் திமுக அரசுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக மக்கள் பிரச்னைகளை மக்கள் நீதி மய்யம் அரசின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்றுள்ளது. சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளது. செய்யத் தவறியவற்றை சுட்டிக்காட்டி, விமர்சிக்கவும் தயங்கியதில்லை. 

திமுக அரசும் மநீம அறிக்கைகளில் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை நிறைவேற்றியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எங்கள் பணி தொடரும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்தி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுக அரசை வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : திமுகவின் முக்கிய விக்கெட்..தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜகவுக்கு தாவும் எம்.பி திருச்சி சிவா மகன்

இதையும் படிங்க : நான் ஜெயலலிதாவின் போன்று ஆட்சியை தருவேன்.. இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு திகில் காட்டும் சசிகலா !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!