1 Year Of CM Stalin: தமிழக அரசு மகளிர்களுக்கான அரசா? சொன்னதை செய்து காட்டினாரா முதலமைச்சர் ஸ்டாலின்...

Published : May 07, 2022, 03:42 PM ISTUpdated : May 07, 2022, 03:45 PM IST
1 Year Of CM Stalin:  தமிழக அரசு மகளிர்களுக்கான அரசா? சொன்னதை செய்து காட்டினாரா முதலமைச்சர் ஸ்டாலின்...

சுருக்கம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு மகளிருக்கான அரசு என திமுகவினர் கூறி வரும் நிலையில், முதலமைச்சர ஸ்டாலின் உறுதியளித்தப்படி பெண்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றபட்டதா?

பெண்களுக்கான அரசு திமுக அரசு

2011 ஆம் ஆண்டில் அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்த திமுக,  அடுத்த 10 ஆண்டும் ஆட்சி கட்டிலில் அமர முடியாத நிலையில் தான் இருந்தது. தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து சோதனைகளுக்கு உள்ளானது. இதில் திருப்புமுனையாக  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் மத்தியில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தியது. இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இந்த கால கட்டத்தில் மகளிர்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை திமுக வழங்கியது. திமுக வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா ?

 

திமுக அரசின் சாதனைகள்

* நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்

* 6 முதல் 12-ஆம் வரை அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

* அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 %ஆக உயர்வு

* 16.519 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம்.

* ரூ.32.39 கோடியில் 21,598 குழுக்களுக்கு சுழல்நிதி

* ரூ.255.25 கோடியில் 37.500 குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி

* ரூ.1.17.812 கோடியில் மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்

* 1,62,069 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27.12 கோடியில் வட்டி மானியம்

* அங்கன்வாடி பணியாளர் & உதவியாளர் பதவிகளில் 25 % கைம் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை

 

பாதுகாப்பு பணியில் இருந்து பெண்களுக்கு விலக்கு

* ரூ.55.43 கோடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 22:164 பெண் குழந்தைகள் பயன்

* குடும்பத் தலைவி பெயரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாடு

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு வங்கிக் கடன் ரூ.2.755.99
கோடி தள்ளுபடி.

* ஐந்து பவனுக்கு உட்பட்ட 4 ஆயிரத்து 805 கோடி அளவில் பொது நகை கடன் தள்ளுபடி

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகை 2755 கோடி தள்ளுபடி

* 14 லட்சத்து 83 ஆயிரத்து 966 விவசாயிகளுக்கு 10 ஆயிரத்து 291கோடி பயிர் கடன்

* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 பதினான்கு வகை மளிகை பொருட்கள்

* முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு

ஒரே வருடத்தில் இது போன்ற பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றியிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், `மகளிர்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு இது வரை வெளியிடாதது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருப்பது ஆறுதல் தருவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர்.
  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை