
இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காணொலி காட்சி மூலம் தொண்டர்களிடையே உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், 'கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலில் உறவும் தேவையில்லை, எதிரியும் தேவையில்லை . நல்லது நடக்கும்போது பாராட்டுவதும் , நடக்காதபோது விமர்சிப்பதும் எங்கள் நோக்கம்.
என்னை பாஜகவின் பி டீமாக இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் செய்தவர்கள் தான் தற்போது பாஜகவின் பி டீமாக ஆக உள்ளனர். நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும் வழித்தடமாக மாற்றி மக்கள் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள். 6 முறை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகம் என்பது ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருக்கின்றது. நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும், வழித்தடமாக மாற்றி மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள்' என்று கூறினார்.
இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !