10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யல.. ஒரு தேர்தலை கூட நடத்த முடியல.. முதலமைச்சர் கடும் தாக்கு..

By Thanalakshmi VFirst Published Apr 24, 2022, 1:34 PM IST
Highlights

அனைத்து ஊராட்சிகளுமே எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ, செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

அனைத்து ஊராட்சிகளுமே எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ, செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று நாடு முழுவதும் தேசிய ஊராட்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.பெண்களிடம் முதல்வர் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் கிராம சபை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி ஊராட்சிகளில் எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, தன்னிறைவு அடையக்கூடிய வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது தான். அந்த திட்டத்தைப் புதுப்பொலிவோடு தற்போது நிறைவேற்றத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்களை ஆண்டுக்கு 4 முறைதான், அதுவும் முறையாக கூட்டியதில்லை. இந்நிலையில் சட்டசபையில் இனிமேல் கிராம சபைக் கூட்டங்கள் ஆண்டுக்கு 6 முறை கட்டாயமாக கூட்டப்பட வேண்டும் என்று 110-விதியின் கீழ் அறிவித்துள்ளேன்.

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் நாளாக கடைபிடித்து, சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவிருக்கிறது. கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது ,உத்தமர் காந்தி விருது வழங்கப்படவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது.

ஏறக்குறைய 10 வருட காலமாக இருந்த ஆட்சியினால், உள்ளாட்சி அமைப்பு தேர்தலை கூட நடத்தமுடியாத நிலை இருந்தது. நீடித்த இலக்குகளை எட்டுவதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாக விளங்கும். குடிநீர் பிரச்சினை, ரேஷன் கடை பிரச்சினை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வரக்கூடிய இடையூறுகள், நூறுநாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள், விரைவில் இவைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

மாநில மற்றும் மத்திய அளவில் வகுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை எல்லாம் திறம்பட தேவைகேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும்.  அனைத்து ஊராட்சிகளுமே எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ, செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

click me!