காந்திஜியை போல நீங்களும்.. அன்பால் கிடைத்த வெற்றி! ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல் ஹாசன்

By Raghupati R  |  First Published May 13, 2023, 5:16 PM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக ,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பெரும் கட்சிகள் மோதிக்கொண்டன. இதையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியது.

Latest Videos

ஆரம்பம் முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகுத்து வருகிறது . ஆளும் பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காந்திஜியைப் போலவே நீங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்தீர்கள். காந்திஜியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள்.

Shri ji, Heartiest Congratulations for this significant victory!

Just as Gandhiji, you walked your way into peoples hearts and as he did you demonstrated that in your gentle way you can shake the powers of the world -with love and humility. Your credible and… pic.twitter.com/0LnC5g4nOm

— Kamal Haasan (@ikamalhaasan)

அவரைப் போலவே உங்கள் மென்மையான வழியில் உலகின் சக்திகளை அன்புடனும் பணிவுடனும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தீர்கள். வெற்றிக்கு மட்டுமின்றி வெற்றி பெற்ற முறைக்கும் பாராட்டுக்கள்” என்று ராகுல் காந்தியை பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க..12 ஹெலிகாப்டரில் தமிழகத்துக்கு வரும் கர்நாடக காங்கிரஸ் வெற்றி MLAக்கள் - மீண்டும் கூவத்தூர் பார்முலா

click me!