தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி; திமுக செயற்குழுவில் புகழாரம்!

By vinoth kumarFirst Published Aug 14, 2018, 11:13 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், க.அன்பழகன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், க.அன்பழகன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விளக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

* இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டியுள்ளனர். 

Latest Videos

* மாபெரும் அரசியல் தலைவரான கலைஞர் பன்முகத் திறமை கொண்டவர். 

* காவிரி நடுவர் மன்றம் அமைக்க காரணமாக இருந்தவர் கலைஞர்.

* முல்லைப் பெரியாறு பிரச்சனையில் சட்ட ரீதியான தீர்வுக்கு வழிவகுத்தவர் கலைஞர்.

* கலைஞர் ஆட்சியில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டன. 

* கிராமங்களில் கலை, அறிவியல் கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்.

* பல்லைக்கழகங்களை உருவாக்கி கல்வியில் புரட்சியை கொண்டு வந்தவர் கலைஞர்.

* கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர் என செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின்   சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டுள்ளது.

* கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி.

* சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.

* பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர்.

* மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு அளித்தவர்.

* ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 1956 முதலே குரல் கொடுத்து வந்தவர்.

click me!