தி.மு.க பொருளாளர் ஆகும் துரைமுருகன்! மு.க.ஸ்டாலினின் அதிரடி திட்டத்தின் அசத்தல் பின்னணி!

Published : Aug 14, 2018, 10:39 AM ISTUpdated : Sep 09, 2018, 07:49 PM IST
தி.மு.க பொருளாளர் ஆகும் துரைமுருகன்! மு.க.ஸ்டாலினின் அதிரடி திட்டத்தின் அசத்தல் பின்னணி!

சுருக்கம்

தற்போது தன் வசம் உள்ள பொருளாளர் பதவியை துரைமுருகனுக்கு வழங்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மறைவைத் தொடர்ந்து தி.மு.க முக்கிய பொறுப்புகளை கேட்டு ஸ்டாலினை அவரது குடும்ப உறவுகள் பலரும் நச்சரித்து வருகின்றனர். 

தற்போது தன் வசம் உள்ள பொருளாளர் பதவியை துரைமுருகனுக்கு வழங்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மறைவைத் தொடர்ந்து தி.மு.க முக்கிய பொறுப்புகளை கேட்டு ஸ்டாலினை அவரது குடும்ப உறவுகள் பலரும் நச்சரித்து வருகின்றனர். அதிலும் ஸ்டாலின் தலைவராக உள்ளதால் அவர் வசம் இருக்கும் பொருளாளர் பதவிக்கும் பலர் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். கலைஞர் தலைவராக இருந்த போது ஸ்டாலின் பொருளாளராக இருந்தார்.

இதே போல் தற்போது ஸ்டாலின் தலைவரான பிறகு அவரது மகன் உதயநிதிக்கு பொருளாளர் பதவியை கொடுக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர். மேலும் தி.மு.க அறக்கட்டளையிலும் தங்களை சேர்க்க வேண்டும் என்று கலைஞரின் மகன் மு.க.தமிழரசை சார்ந்தவர்களும் காய் நகர்த்தி வருகின்றனர். ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை தி.மு.க பொருளாளர் ஆக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.


ஆனால் கலைஞர் மறைந்த உடனேயே தலைவரானதுடன் அவரது மகனையும் கட்சியின் பொருளாளர் ஆக்கிவிட்டார் என்கிற விமர்சனத்தை எதிர்கொள்ள ஸ்டாலின் தயங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் மு.க.அழகிரி அவரது மகன் துரை தயாநிதிக்கு கட்சியில் முக்கிய பதவியை கேட்டு செல்வி மூலம் மிகுந்த நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஸ்டாலின் தலைவராகவும், அவரது மகன் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டால் அழகிரியின் கோபத்தை எதிர்கொள்ளவும் நேரிடும் என்று ஸ்டாலின் யோசிக்கிறார்.

 எனவே தான் தற்போதைக்கு தி.மு.கவில் மூத்த உறுப்பினர் என்ற வகையில் துரைமுருகனுக்கு பொருளாளர் பதவியை கொடுக்கலாம் என்று ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குடும்ப அரசியல் என்கிற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மூத்த நிர்வாகியை ஸ்டாலின் கவுரப்படுத்தியுள்ளார் என்கிற பாசிடிவ் விமர்சனத்தையும் பெற முடியும் என்று கருதுகிறார். எனவே தி.மு.க பொருளாராக துரைமுருகன் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். மேலும் கட்சியில் காலியாக உள்ள மேலும் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதுடன், செயல்படாத பலரை நீக்கிவிட்டு புதியவர்களை கட்சிக்கு கொண்டு வரவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

ரூ.250 கோடி ஊழல்... சேகர்பாபு, மேயர் பிரியா, ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர்கள் பகீர் எச்சரிக்கை..!
முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!