ஆளுநர் ஆர் என் ரவி செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும்..? எச்சரிக்கை விடுத்த கி.வீரமணி

By Ajmal Khan  |  First Published Dec 1, 2022, 12:44 PM IST

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும் என திராவிடர் கழக தலைவர்  கி வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 


திராவிடர் கழகம் ஆர்பாட்டம்

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்ட மசோதாவிற்கு இன்னும் தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவியை ஒப்புதல் அளிக்காததை கண்டித்து திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கி வீரமணி, ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை சுமார் 32 நபர்கள் இறந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இறப்பவர்களுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! திமுகவினருக்கு கட்டளையிட்டு தீர்மானம்..?

அரசியல்வாதி போல் செயல்படும் ஆளுநர்

அண்ணாமலைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், நேரம் ஒதுக்க தெரிந்த ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க நேரம் ஒதுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். திராவிட கழகம் சார்பில் போராட்டங்களை அறிவித்ததற்கு பிறகு தான் ஆளுநர் மாளிகையின் கதவு கொஞ்சம் திறந்திருக்கிறது. திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடக்கூடாது, என்பதற்காக ஆளுநர் இப்படி செயல்பட்டு  வருகிறார். ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதி போல சனாதான கொள்கைகளை பற்றி பேசி வருகிறார். அவர் இந்த சட்டத்திற்கு நந்தி போல குறுக்கே படுத்து இருக்கிறார். திமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காக இதுபோன்று செய்து வருகிறார்.

 கருப்பு கொடி காட்டப்படும்

சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இன்னும் 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில்,  ஆளுநர் ஆர்எஸ்எஸ் காரர் போல பேசிக்கொண்டு , தேவை இல்லாமல் திராவிட சித்தாந்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு தன் கடமைகளில் இருந்து தவறுகிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும், ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும், தமிழகம் அமைதியாக இருக்கும் சூழலில் அமளியை ஏற்படுத்த நினைக்கிறார்கள், நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம் , எங்களது போராட்டம் அடுத்த கட்டமாகவும் தொடரும்" என கி.வீரமணி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

டீசல் விலை உயர்வு..! பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பா..? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தகவல்
 

click me!