தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு நண்பர்கள் தான் வாடகை செலுத்துவதாகவும், தனது உதவியாளர்களுக்கும் அவர்கள் தான் மாத ஊதியம் வழங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கேஎஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
திமுக- பாஜக மோதல்
திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கடும் மோதல் போக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திமுக மூத்த நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்தார். அப்போது தான் முதல் தலைமுறை அரசியல்வாதியென்றும், தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகையும்,, எனது 3 உதவியாளர்களுக்கும் ஊதியமும் எனது நண்பர்கள் தான் வழங்கி வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து அண்ணாமலை கிழக்கு கடற்கரை சாலையில் தங்கியிருக்கும் வீட்டின் வாடகை மட்டும் 3 அரை லட்சம் என தகவல் வெளியானது. இது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒரு வருடமாக வீட்டு வாடகை கட்டவில்லை
இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2முறை சட்டமன்ற உறுப்பினர், 1முறை மக்களவை உறுப்பினர், தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16000 வாடகைக்கு குடியிருக்கிறேன். 1வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்
— K.S.ALAGIRI (@KS_Alagiri)
விசாரணை நடத்திடுக
நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது ? மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது ? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் ? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்