திமுகவுக்கு ஜூட் விட்ட கே.ஏ. செங்கோட்டையன் அண்ணன் மகன்... அதிமுகவில் அதிர்ச்சி..!

Published : Sep 16, 2020, 08:32 PM ISTUpdated : Sep 16, 2020, 09:33 PM IST
திமுகவுக்கு ஜூட் விட்ட கே.ஏ. செங்கோட்டையன் அண்ணன் மகன்... அதிமுகவில் அதிர்ச்சி..!

சுருக்கம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ஏ.செங்கோட்டையனின் சகோதரர் மகன் திமுகவில் இணைந்தார். 

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ. காளியப்பன். இவருடைய மகள் கே.ஏ.கே. செல்வம். தமிழக மருந்து விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவராக இவர் உள்ளார். இந்நிலையில் கே.ஏ.கே. செல்வம் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின.

 
இந்நிலையில் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஏற்பாட்டின் பேரில் சென்னை வந்த கே.ஏ.கே. செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்  ஆளும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!