அரியர் மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Sep 16, 2020, 6:45 PM IST
Highlights

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியதால் இறுதியாண்டை தவிர பிற ஆண்டுகளின் செமஸ்டர் தேர்வை ரத்து செய்த முதல்வர், கட்டணம் செலுத்தி தேர்வெழுத காத்திருந்த அரியர் மாணவர்களின் தேர்வையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என ஏஐசிடிசி தனக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூர்ப்பா தெரிவித்தார். ஆனால், அரசுக்கு அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என்று அமைச்சர் அன்பழகன் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில்அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? என அரசு விளக்கம் அளிக்க பொன்முடி கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன், நீதிமன்ற தீர்ப்பின் படி அரியர் மாணவர்கள் விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுதவே தயாராக இல்லை என்றும் அமைச்சர் கூறினார். மேலும், சூரப்பா தனது தனி இமெயில் மூலமாக ஏஐசிடிசி கடிதம் எழுதியதாகவும் அதனை பற்றி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது எனவும் கூறினார்.

click me!