மோடி மீது ஜோதிமணி எம்.பி போடும் வீண்பழி... ’கடவுள் போடும் கணக்கில் யாரும் தப்ப முடியாது...

Published : Apr 29, 2021, 03:22 PM IST
மோடி மீது ஜோதிமணி எம்.பி போடும் வீண்பழி... ’கடவுள் போடும் கணக்கில் யாரும் தப்ப முடியாது...

சுருக்கம்

எய்ம்ஸ் மருத்துவமனை மூடப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மத்தியில் ஆளும் பாஜக மீது அபாண்ட குற்றம் சாட்டியுள்ளார்.


எய்ம்ஸ் மருத்துவமனை மூடப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மத்தியில் ஆளும் பாஜக மீது அபாண்ட குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேரு தொலைநோக்குடன் உருவாக்கிய எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை ஆக்சிஜன் இல்லாமல் மூடியதுதான் மோடி அரசின் சாதனை. ஆட்சி என்பது அதிகாரம் மட்டுமல்ல. மக்கள் மீதான அக்கறை, தொலைநோக்கு, ஆளுமைத்திறன். இது எதுவுமில்லாத கொடுங்கரங்களில் சிக்கி இந்தியா சீரழிகிறது’’ என அவர் தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன்கள், ‘’அவசர வார்டில் நோயாளிகளை அனுமதிப்பதை 1மணிநேரம் நிறுத்தியதை ஆக்ஸிஜன் இல்லாமல் நிறுத்தியதாக அப்பட்டமாக பழிகூறும் உங்களை என்ன சொல்வது. ஒவ்வொருவர் செய்யும் வினையையும் கடவுள் அவரவர் கணக்கில் சரியாக வரவு வைக்கிறார். கடவுள்போடும் கணக்கில் எவரும் தப்பமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கொள்கை ரீதியாக மோடியை எதிர்க்க முடியாத காங்கிரஸ் இப்போது பொய் செய்திகளை உருவாக்கும் ஆலைகளை துவக்கி தலைவர்களில் இருந்து தொண்டர் வரை பொய்செய்திகளை பரப்புகிறது. AIIMSல் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததால் பைப்புகளை சீரமைக்க அவசர வார்டில் அனுமதியை ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்தது. மோடி பதவி விலகனும் அந்த ஒரு குடும்பம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளனும்’’ என பலரும் ஜோதிமணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!