#BREAKING மே 2ல் முழு ஊரடங்கு... வேட்பாளர்கள், முகவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 2:32 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2ல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் சமீபத்தில் கட்டுப்பாடுகளுடன் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன் படி தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்படிருந்த கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுது போக்கு இடங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் ஆகியன தொடர்ந்து மூடப்படுகின்றன. அதேபோல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2ல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சியினரின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

click me!