#BREAKING தமிழகத்தில் மே, 1, 2ம் தேதி முழு ஊரடங்கா? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 1:38 PM IST
Highlights

தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளில் எண்ணிக்கை மாறலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 

தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளில் எண்ணிக்கை மாறலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய நாளில் மக்கள், அரசியல் கட்சியினர் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து, அரசு விடுமுறை நாளான மே 1ம் தேதி மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரத சாகு;- வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசுதான் முடிவுவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.  வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடக்கும். 

தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளில் எண்ணிக்கை மாற்றம் இருக்கலாம். பெருபான்மையான வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது. 98.6 டிகிரி பாரன்ஹூட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணணும் மையத்துக்குள் அனுமதியில்லை. RT-PCR சோதனை தடுப்பூசி சான்று இருந்தாலும் 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் அனுமதியில்லை. 

தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் இருப்பார்கள். 16,387 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பாளர் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

click me!