தமிழகத்தில் 2 நாள் முழு ஊரடங்கு? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 12:54 PM IST
Highlights

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை காரணமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை காரணமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் இன்று அல்லது நாளை தமிழக அரசு சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், அழகு நிலையங்கள், சலுான்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தினசரி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, சற்று குறைந்ததாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்திருந்தார். 

இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே 2ம் தேதி காலை 8  மணிக்கு எண்ணப்பட உள்ளன. கொரோனா காரணமாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை காரணமாக மே, 1, 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று, இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் இன்று காலை முதல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு  ஊரடங்கு நீட்டிப்பு, இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு, மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு அரசு சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!