#BREAKING ரூ.2 லட்சம் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி நிபந்தனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 12:51 PM IST
Highlights

இன்று அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் நாள் நடிகர் விவேக் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பட்டன. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானும் நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி தொடர்பாக சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். 

எனவே கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூரலிகான் மீது வடபழனி காவல் துறையினரிடம் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. 

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டார், உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அதே போல, கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை” தெரிவித்திருந்தார். 

இன்று அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளார். அந்த உத்தரவில் சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் ரூ.2 லட்சத்திற்கு டிமாண்ட் டிராப் எடுத்து கொரோனா தடுப்பூசி வாங்க நிதியாக வழங்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித வதந்தியும் பரப்பக்கூடாது, பதற்றத்தை உருவாக்க கூடாது என்றும் நிபந்தனை பிறப்பிக்கபட்டுள்ளது. 


 

click me!