#BREAKING தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும்..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 2:25 PM IST
Highlights

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்பின், ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. 

இதனிடையே, கொரோனா தொற்றின் 2வது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும்வரை நீட்டிக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று, சென்னையில் மெட்ரோ ரயில்களைக் குறைந்த அளவில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!