#BREAKING நீட் தேர்வு தாக்கம்... முதல்வரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பபித்த ஏ.கே.ராஜன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 14, 2021, 10:36 AM IST
Highlights

நீட் தேர்வின் தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். 

நீட் தேர்வின் தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். 


தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து கடந்த ஜூன் 10-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், மருத்துவர் ரவீந்திரநாத், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பலரும் அந்த குழுவில் இடம் பெற்றனர். 

நீட் தேர்வு குறித்து ஆராய ஏ.கே.ராஜன் குழுவுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14-ம் தேதி முதல் இதுவரை 4 முறை குழு ஆலோசனை மேற்கொண்டனர். ஆன்லைன் மூலமாக நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்துக்களை குழுவிடம் தெரிவித்திருந்தனர். அந்த கருத்துக்கள் மீதான பரிசீலனை, நீட் தேர்வினால் ஏற்பட்ட தாக்கம் என்ன? என்பது குறித்து ஏ.கே.ராஜன் குழு பணிகளை நிறைவு செய்துள்ளது.

இதனிடையே, ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், குழு அமைத்தது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மேற்கொண்ட அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர். செப்டம்பர் 12ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு நல்ல முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!