கொங்கு மண்டலம் முதல் சென்னை வரை பாஜக அதிரடி... அதகளப்படுத்தும் அண்ணாமலை..!

By Thiraviaraj RMFirst Published Jul 14, 2021, 10:29 AM IST
Highlights

கோவையில் இருந்து, சாலை வழியாக கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் அவருக்கு தம்பரம்வரை வர ஒரு குழுவும், தாம்பரத்தில் இருந்து கமலாலயம் வரும் வரை ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் பா.ஜ.க., தலைவராக, நாளை மறுநாள் விருப்ப ஓய்வு பெற்ற ஈரோட்டை சேர்ந்த கே.அண்ணாமலை பொறுப்பேற்க இருக்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை வழியாக கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் அவருக்கு தம்பரம்வரை வர ஒரு குழுவும், தாம்பரத்தில் இருந்து கமலாலயம் வரும் வரை ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டின் பா.ஜ.க, தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், தலைவர் பதவிக்கு, துணை தலைவராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலையை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அவர், சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், 16ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக அண்ணாமலை, கோவையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னை வருகிறார்.

அதன்படி, இன்று கோவையில் இருந்து புறப்படும் அண்ணாமலைக்கு, பல்லடம், திருப்பூர், பெருந்துறை என வழிநெடுக, கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இரவு திருச்சியில் தங்கும் அவர், நாளை திருச்சியில் இருந்து சென்னை கிளம்புகிறார். பெரம்பலுார், விழுப்புரம், செங்கல்பட்டு என வரவேற்பை பெறும் அண்ணாமலை, இரவு தாம்பரத்தில் தங்குகிறார்.

நாளை மறுநாளான, 16ம் தேதி, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு,பல்லாவரம், ஆலந்துார், சைதாப்பேட்டை வழியாக, மதியம், தி.நகரில் உள்ள கமலாலயம் வருகிறார். அங்கு பிற்பகல், 2:00 மணிக்கு, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அண்ணாமலையின் பதவியேற்பு விழாவையே பிரச்சாரமாக வடிவமைக்க உள்ளனர்.

click me!