ஏடிஎம் கொள்ளைவழக்கில் துருவித் துருவி விசாரிக்கும் போலீஸ். முக்கிய குற்றவாளிக்கு 26ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 10:27 AM IST
Highlights

இது தொடர்பாக டிநகர் தனிப்படை போலீசார்  4 கொள்ளையர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அதில் தனித்தனியாக ஒவ்வொரு குற்றவாளிகளையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் நான்காவதாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஏழு நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக டிநகர் தனிப்படை போலீசார்  4 கொள்ளையர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அதில் தனித்தனியாக ஒவ்வொரு குற்றவாளிகளையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் விசாரணைக்கு பிறகு நான்காவதாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சௌகத் அலியை கடந்த ஆறாம் தேதி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.அப்பொழுது 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.

அதனடிப்படையில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விசாரணை முடிந்து நேற்று மாலை நீதிமன்றத்தில் சௌகத் அலி ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. மேலும் போலீசார் விசாரணையில் சௌகத் அலி மழுப்பலான பதில்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது என போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மூன்றாவதாக கைதுசெய்யப்பட்ட நசீம் உசேனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!